தமிழ் திரை உலகில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வளம் வருபவர் விஜய்சேதுபதி இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சூது கவ்வும் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை கொண்டாடி வந்தார்கள். மேலும் விஜய் சேதுபதி தற்பொழுது நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாகவும்,வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் பாபி சிம்ஹா,ரமேஷ் திலக்,கருணாகரன் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு மக்களும் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவராத என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.
அதன்படி தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது ஆம் இயக்குனர் எம்.எஸ் அர்ஜுன் இயக்கத்தில் சூது கவ்வும் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் மற்றும் ஒரு சில பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படபிடிப்பு ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்துடன் புதிய போஸ்டரையும் பட குழு வெளியிட்டுள்ளது. இதில் சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் என்று அறிவிக்கப்பட்டதால் படம் வித்தியாசமான கதைகளத்தில் உருவாக இருக்கிறது என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.
பொதுவாகவே மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது இவரது நடிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் பலகோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் அதிகமாக நடிப்பதால் இந்த சூது கவ்வும்2 திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
It’s happening…🍀 The Gang 😈 is Coming Again With New Rules ! Gladly Presenting You all .#Soodhukavvum2:Nadum Naatu Makkalum@icvkumar #SJarjun @actorshiva #Karunakaran @ThirukumaranEnt @dopkthillai @ignatiousaswin #Edwinlouis @onlynikil @digitallynow pic.twitter.com/axWhDB74dV
— C V Kumar (@icvkumar) April 16, 2023