ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ.!

aathi
aathi

வெள்ளித்திரையில் பல இயக்குனர்கள் போட்டி போட்டு பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் ஆனால் இயக்குனர்,நடிகர்,பாடகர்,இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வரும் பிரபலம் என்றால் அது ஹிப் ஹாப் ஆதி மட்டும் தான் இவர் இயக்குனராக கடந்த 2017ஆம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விலங்கிவிட்டார்.

இந்த திரைப்படத்தை இயக்கி இவரே நடித்ததால் இவருக்கு மக்கள்கள் நல்ல வரவேற்பு தந்து விட்டார்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஆதி தற்பொழுது தானே இயக்கி தானே நடித்துள்ள திரைப்படம் தான் சிவகுமாரின் சபதம்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு இவர் நடித்த நட்பேதுணை,நான் சிரித்தால் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நன்றாக வசூல் செய்துவிட்டது.அதனைத் தொடர்ந்து தான் இந்த திரைப்படத்தை இயக்கி இவரே நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு என்றாலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதை களம் கொண்டதாக இருக்கும் அதே போல் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என எதிர் பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

அதன்படி பார்த்தால் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளி வந்துள்ளதால் ரசிகர்கள் பலரும் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள் இவரது திரைப்படம் என்றால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியிருப்பார் என்பதால் இவரது திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.