ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் புதிய அதிகாரபூர்வ அப்டேட் இதோ.!

losliya
losliya

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகைக்கு நன்றாக நடிப்பு வந்தால் மட்டுமே அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஆனால் தற்பொழுது எல்லாம் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பல பிரபலங்களுக்கும் சினிமா வாய்ப்புகள் உடனே கிடைத்து விடுகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள் என்றுதான் கூறவேண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போனது.

அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.குறிப்பாக கூறவேண்டும் என்றால் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அதன் பின்னணி வேலைகள் மற்றும் இசை அமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா இவர் இந்த திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்த உடனே அவரது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்துக் கிடக்கிறார்கள்.

ua
ua

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படம் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.