சினிமா திரை உலகில் ஒரு நடிகை சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களின் படங்களையும் பிடிக்கின்றனர். அப்படி ஓடிக்கொண்டிருப்பதால் ஒருகட்டத்தில் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்துவார்கள்.சம்பளத்தை உயர்த்திக்கொண்டு நடிப்பதோடு மட்டுமல்லாமல் சற்று கவர்ச்சியை காட்டி ஓடிக் கொண்டிருந்தால் இன்னும் அதிகம் சம்பளம் வாங்கலாம் என ஒரு சிலர் இருக்கின்றனர் .இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் 10 நடிகைகள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது
அதை நாம் பார்ப்போம் : இளம் வயதிலேயே சினிமா உலகில் கால்தடம் பதித்து வெற்றி கண்டவர் லக்ஷ்மி மேனன் வெகு விரைவிலே இவர் டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் ஒரு படத்திற்கு சுமார் 45 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி தற்போது டாப் படங்களில் நடித்து வருகிறார் மேலும் சோலோவான படங்களிலும் நடிக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவர் ஒரு படத்திற்கு ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா ஒரு படத்திற்கு சுமார் 2 கோடி சம்பளம் வாங்வதாக கூறப்படுகிறது .தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 2 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. தமிழ் படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தற்போது சினிமாவில் பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இவர் ஒரு திரைப்படத்தில் 2 கோடி சம்பளம் வாங்குகிறார்.
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பாக பயணிக்கும் சமந்தா ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.15 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா தற்போது ஒரு திரைப்படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களை கைப்பற்றி நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் மூன்று அல்லது நான்கு கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி அவர்களை வளைத்துப் போட்டிருக்கும் ராசி கண்ணா தற்பொழுது மற்ற மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு படத்திற்கு இவர் 4 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த அனுஷ்கா தற்போது உடல் எடையை அதிகரித்து காணப்பட்டாலும் படவாய்ப்பு என்று வந்துவிட்டால் இவருக்குத்தான் அதிக சம்பளம் என கூறப்படுகிறது இவர் ஒரு படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றன