இந்த வருடம் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த முதல் பத்து திரைப்படங்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகரின் நடிகைகளின் கூட்டணியில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் ரூபாய் 225 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில் ஆகியோர்களின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் ரூபாய் 153 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பிறகு அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் வலிமை இந்த படம் ரூபாய் 118 கோடி வசூல் செய்தது. பிறகு பிரசாந் நில் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் கேஜிஎஃப் 2 இந்த படம் ரூபாய் 115 கோடி வசூல் செய்தது.
பிறகு அஜித் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் பீஸ்ட் இந்த படம் ரூபாய் 113 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரூபாய் 85 கோடிக்கு மேல் வசூல் செய்தது ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் ரூபாய் 82 கோடி வசூல் செய்தது.
மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் ரூபாய் 25 கோடியும் பிரதிப் ரங்கநாதன் இயக்கத்தில் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றினை பெற்ற லவ் டுடே திரைப்படம் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒன்பதாவது இடத்தினையும், கார்த்திக் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படம் ரூபாய் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பத்தாவது இடத்தில் பிடித்துள்ளது.