அமெரிக்காவில் அதிக வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.. ஆனால் அஜித், விஜய்யின் படங்கள் ஒன்று கூட இல்லையே.!

ajith-vijay
ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித், விஜய், ரஜினி என எந்த நடிகர்களின் திரைப்படங்களாக இருந்தாலும் அது தமிழினையும் தாண்டி பகுதிகளிலும் எவ்வளவு வசூலாகி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்திருக்கும் ஐந்து தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மேலும் அந்த பட்டியலில் அஜித் விஜயின் ஒரு படம் கூட இடம் பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சினை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரையிலும் அதிக வசூல் செய்திருக்கும் தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட்டை தற்பொழுது பார்க்கலாம் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சன் பிரக்சஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் தான் 2.0 இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்றது.

இந்த படம் $5,509,317 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அதனை முறியடித்து உள்ளது அந்த படம் இதுவரையிலும் $5.54 மில்லியன் வசூல் செய்து இருக்கிறது இந்த படம் தான் அதிக வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் இடத்தினையும்,  இரண்டாவது இடத்தினை ரஜினியின் 2.0 திரைப்படமும்,bமூன்றாவது இடத்தை ரஜினியின் கபாலி திரைப்படமும் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் நான்காவது இடத்தையும், இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படம் ஐந்தாவது இடத்தினையும் பிடித்துள்ளது.

இவ்வாறு இந்த பட்டியலில் மூன்று திரைப்படங்கள் ரஜினி படங்கள் மற்றும் கமலஹாசனின் ஒரு படம் இவ்வாறு இடம் பிடித்துள்ள நிலையில் நடிகர் அஜித், விஜய் ஆகியோர்களின் ஒரு திரைப்படங்கள் கூட பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.