தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது சர்வதேச அளவிலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடுவது என பல திறமைகளை கொண்டுள்ள இவர் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். ஏராளமான விமர்சனங்களுக்குப் பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் சினிமாவில் வளர்ந்த இவர் தற்பொழுது சிறந்த நடிகர்களில் ஒருவராக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
மேலும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு ஏராளமான விமர்சனங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வளர்ந்தவர் தான் தனுஷ் என கூறி வருகிறார்கள்.மேலும் சர்வதேச அளவிலும் தடம் பதித்துள்ள தனுஷ் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிகப் படங்கள் வெளியானது இந்த 2022 ஆம் ஆண்டு தான். 2011ஆம் ஆண்டு மட்டும் ஆடுகளம், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் சீடன் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அனேகன், மாரி, தங்க மகன் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் ஹிந்தியில் ஷமிதாப் என்ற படமும், சிறப்பு தோற்றத்தில் நடித்த வை ராஜா வை படமும் வெளியானது மொத்தம் நான்கு தமிழ் திரைப்படங்களும் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் இதனைத் தொடர்ந்து நானே வருவேன் படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக இருக்கிறது ஆனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படவில்லை அதன் பிறகு தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாத்தி படம் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இவ்வாறு தமிழில் நான்கு படங்களிலும், தி கிரே மேன் என்ற ஆங்கில படத்திலும் நடித்து கலக்கிவுள்ளார்.