மறுபடியும் இவங்களேவா..? OTT பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழி சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது கமலஹாசன் அவர்கள் ஒவ்வொரு முறையும் பதிவாகும் வாக்குகளை வைத்து புள்ளி விவரத்தில் கூறுவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ott யில் முதன்முதலாக ஹிந்தியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது.  இதனை தொடர்ந்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இணையத்தில் ஒளிபரப்பலாம் என முடிவு செய்துள்ளார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சிகளையும் நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வனிதா அனிதா சம்பத் ஆகியோர்கள் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்கு உயர்ந்து விட்டது என்றே கூறலாம்.