சமீபகாலங்களாக தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த பலரும் சின்னத் திரைக்கு அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக கலக்கி வருபவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் எந்தெந்த நடிகைகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வெள்ளித்திரையில் ரசிகர்களின் பேவரைட் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற லிஸ்டை தற்பொழுது பார்ப்போம்.
1. பிரியா பவானி சங்கர்: இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார் அதன் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரை படத்தில் ஹீரோயினாக நடித்து திரைக்கு அறிமுகமாகி தற்போது இவரது கையில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இருகின்றனர்.
2. சரண்யா துராடி : இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.அந்த வகையில் ஆயுத எழுத்து,நெஞ்சம் மறப்பதில்லை, ரன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
3. அனிதா சம்பத்: சன் மியூசிக் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். அதன்பிறகு சமீபத்தில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்ட பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். மாஸ்டர், டேனி போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
4. லாஸ்லியா: இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார் அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரெண்ட்ஷிப்,குட்டப்பன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
5. திவ்யா துரைசாமி : செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சினிமா பக்கம் தலை காட்டி வருகிறார். தற்போது இவருக்கு நிறைய ரசிகர்கள் இருகின்றனர்.