சினிமாவில் சிறு வயதிலிருந்து நடித்து தற்போது தனக்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கமலஹாசன் மேலும் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் படத்திற்கு முன்பாக குறைவாக வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தை விக்ரம் படுத்துருக்கு பிறகு அதிகமாக வாங்க ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் நடிகர் கமலஹாசன் அந்த வகையில் கடந்த ஐந்து சீசர்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் தற்போது ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி துவங்க இருக்கிறதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்தார் கமலஹாசன் அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமாகவும் disney+ hotstarல் பார்க்கலாம் என்றும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருந்தார் கமல்ஹாசன்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுக் கொள்ள போகும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி போட்டியில் கலந்து கொள்ள போகும் நட்சத்திரங்கள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
விஜே ரக்சன், பாரதி கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி அர்ச்சனா, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, ரவீந்தர், மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி ரச்சிதா மகாலட்சுமி, வி ஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, ஜி பி முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களாக கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.