கடந்த 2021 ஆம் ஆண்டில் பல சின்னத்திரை பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர் அதில் முக்கிய சின்னத்திரை நடிகர் நடிகையான ஷபானா மற்றும் ஆர்யன் திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் பலருக்கும் ஷாக் ஆகின. நடிகை ஷபானா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து உலகமெங்கும் பிரபலமடைந்தவர்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கூட்டமே உள்ளன. அந்த வகையில் இவர் சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் என்பவரும் காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் சிம்ப்ளாக கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்கள் வெவ்வேறு மதம் என்பதால் பெற்றோர்களின் சம்மதம் இன்றி இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்nஎன்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷபானா செம்பருத்தி சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் ஆரியன் நடித்துவந்த பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சில காரணங்களால் இவர் சமீபத்தில் தான் வெளியேறினார்.
மேலும் அவருக்கு பதில் செழியன் கதாபாத்திரத்தில் வேறு ஒரு பிரபலமும் மாற்றப்பட்டு நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மற்ற ஜோடிகள் போல ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் இணைந்து சோஷியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெரிதும் வெளியிடுவதில்லை எப்போதாவது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருவர்கள்.
அந்த வகையில் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு மாதங்கள் நடந்துள்ளதால் அதனை வெளிப்படுத்தும் வகையில் ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் நெருக்கமாக கட்டி அணைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்.