இளைய தளபதி விஜய் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சைக்கிளில் வந்தது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் விஜய் எதற்காக சைக்கிளில் வந்து வாக்களித்துச் சென்றார் என ரசிகர்கள் பலரும் அப்பொழுது குழம்பி வந்தார்கள்.
இதற்கிடையில் தளபதி 65 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கூடிய சீக்கிரம் நடைபெற வேண்டும் என்பதற்காக வாக்களித்த கையோடு விஜய் அன்று இரவே ஜார்ஜியா நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டார்.
மேலும் நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூலித்து சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஒரு நல்ல பெயர் கிடைத்து விட்டது.
மேலும் விஜய் தனது 65ஆவது திரைப்படத்திற்காக விமான நிலையத்தில் ஜார்ஜியா நாட்டிற்கு செல்லும் பொழுது எடுத்த புகைப்படங்கள் கூட சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்தது.
இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் அவரது 65ஆவது திரைப்படம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனை ரசிகர்களுக்கு சொல்லும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் நெல்சன் கூறும் வார்த்தையை கேட்டு கொண்டு வேற ஒரு கெட்டப்பில் உள்ளார்.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் வேற லெவலில் தான் நடிக்கப் போகிறார் என கூறி வருகிறார்கள்.