வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைக்கப்போகும் அருண் விஜய்யின் மகன் அருண் விஜய் பகிர்ந்த தகவல் இதோ.!

arun-vijay
arun-vijay

தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் அருண்விஜய் இவர் நடிக்கும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியான வெற்றியை இவருக்கு வாங்கித் தரவில்லை.

இருந்தாலும் துவண்டு போகாமல் அருண் விஜய் தனது அடுத்அடுத்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது மட்டுமல்லாமல் தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவரது நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைகிறது.

இதனைத் தொடர்ந்து இவரது மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைய போகிறார் அருண்விஜயின் மகன்.

அருண் அஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரது மகன் நடிக்கப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் தகவலை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இவர் போட்ட அந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் பலரும்  அருண் விஜய்யின் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருவது மட்டுமல்லாமல் இவர் பகிர்ந்தது இந்த தகவலை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.