இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு அதற்காக பல தடவை முயற்சி செய்து தோல்வியை சந்தித்தாலும்.. தொடர்ந்து போராடினார்.
ஒரு வழியாக சரியான பிளான் போட்டு பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதுவும் இந்த படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், விக்ரம், பார்த்திபன், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பாக பட குழுவினர் தொடர்ந்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் முதலில் தமிழ்நாடு சுற்றி பிரமோஷன் செய்த படக்குழு..
அதன் பிறகு கேரளா, மும்பை, ஹைதராபாத் என சுற்றி வருகிறது நிச்சயம் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளே பிரமாண்டமான ஒரு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது இப்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பிரீ புக்கிங்கில் மட்டுமே வெளிநாடுகளில் 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். ஐஸ்வர்யா ராய் – 10 கோடி, விக்ரம் – 12 கோடி, திரிஷா – 2.5 கோடி, ஜெயம் ரவி – 8 கோடி, கார்த்தி – 5 கோடி, பிரகாஷ்ராஜ் மற்றும் ஷோபிதா -1 கோடி, ஐஸ்வர்யா – லட்சுமி 1.50 கோடி.. எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..