சினிமாவில் பல்வேறு நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகின்றனர் ஆனால் அவர்களை எல்லாம் ஒரு விஷயத்தில் ஓவர்டேக் செய்து என்றும் நிரந்தர இடத்தை பிடித்தவர் நடிகர் கமல். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் தனது உடம்பை வருத்திக் கொண்டு நடிப்பது என நடிப்பிற்காக தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டு நடிப்பது கமலின் பழக்கம் அதனால் தான் இவர் இன்றும் சினிமாவில் அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
இவரது திரைப்படங்களும் நல்லதொரு வெற்றியை இதுவரையிலும் ருசித்து உள்ளது உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்து இருந்தார் அதன் பின் பெரிய அளவில் படங்களில் கமிட் ஆகவில்லை.
அப்படி கமீட் ஆனா அந்த படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் சில வருடங்கள் கழித்து நடிக்க ஆயத்தமாகி உள்ளாராம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பல ஜாம்பவான்கள் கமலுடன் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் மேலும் பல்வேறு இளம் இயக்குனருடன் கதையை கேட்டு உள்ளார் வெகு விரைவிலேயே அவர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது ஆம் உலக நாயகன் கமலஹாசனின் சொத்து மதிப்பு சுமார் 176. 93 கோடி என தெரியவந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் தகவல் மட்டும் தீயாய் பரவி வண்ணமே இருக்கின்றது.