வெளிநாட்டிலும் வசூல் வேட்டை நடத்திய டாக்டர் படம் – முழு வசூல் விவரம் இதோ.

doctor
doctor

சினிமாவுலகில் ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சினிமா உலகில் இளம் நடிகர்கள் பயணிப்பது வழக்கம் அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியை அப்படியே பின்பற்றுவது அவரது திரைப்படங்களில் தெரிகின்றன. ஏனென்றால் ரஜினி எப்பொழுதும் காமெடி கலந்த ஆக்ஷன் மற்றும் காதல் படங்களில் நடிப்பதை வழக்கமாக சிவகார்த்திகேயன் செய்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும்  நடித்த திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படமும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டத்தை திரையரங்கு பக்கம் இழுத்துள்ளது.

ஒரு நல்ல விமர்சனத்தையும் பெற்று சிறப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருப்பதால் பட்டிதொட்டி எங்கும் படம் ரிலீசாகி உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடினார். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் மிகப்பெரிய அளவில் வசூலை முதல் நாள் நடத்தியது. வெளிநாட்டில் முதல் நாள் டாக்டர் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தகவலும் வெளியாகி உள்ளது அதன்படி டாக்டர் திரைப்படம்.

அமெரிக்காவில் 130 k ஆஸ்திரேலியாவில் 20 k வசூல் செய்து உள்ளது மேலும் சிங்கப்பூரில் மட்டும் அதிக பாக்ஸ் ஆபீஸ் செய்த திரைப்படமாக இப்பொழுது டாக்டர் திரைப்படம் நம்பர் 1 இடத்தில் உள்ளது.