முதல் வார வசூல் நிலவரம் இதோ.! “டாக்டர்” திரைப்படம் கைபற்றிய மொத்த கோடி எவ்வளவு தெரியுமா.?

doctor
doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் டாக்டர். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இதனையடுத்து தற்போது நெல்சன் டாப் நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அடுத்து கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கி கொண்டு வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கு மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் உள்ளன.

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அர்ச்சனா, தீபா, அர்ச்சனாவின் மகள் சாரா, யோகிபாபு, ரெடின் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக அமைந்ததால் திரையரங்குகளில் மக்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பு பெரும் அளவில் இருந்தன.

இதனை அடுத்து நடிக்க போகும் திரைப்படங்களில் அவர் சம்பளத்தையும் யுயர்த்தி உள்ளாராம் . சிவகார்த்திகேயன் அடுத்து டான் திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனமும் வர ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

வசூலில் கலக்கி வரும் இந்த திரைப்படம் முதல் வார முடிவில் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம். தமிழ்நாடு : 1- ரூ 6.07 கோடி , 2-  ரூ 7.25 கோடி, 3- ரூ 1.71 கோடி, 4-  ரூ. 1.58 கோடி, 5 – ரூ 2.14 கோடி,6 – ரூ 3.52 கோடி, 7- ரூ 3.23 கோடி. மொத்தம் ரூ 25. 50 கோடி, சென்னை: 1- ரூ 0.54 கோடி, 2- ரூ 0.66 கோடி, 3- ரூ 0.23 கோடி, 4- ரூ 0.21 கோடி, 5- ரூ,0.27 கோடி,6-ரூ 0.40 கோடி, 7- ரூ ௦.38 கோடி, மொத்தம் ரூ 2.69 கோடி.