வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது இந்த படம் தீபாவளி அன்று வெளியிட குறிவைத்து இருந்தாலும் தற்போது அதிலிருந்து விலகி வேறு ஒரு தேதியை லாக் செய்துள்ளது.
இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து மனோஜ், எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷினி, கருணாகரன், ஏஸ். எ. சந்திரசேகர் போன்ற பலர் நடித்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பாக படத்திலிருந்து சில அப்டேட்டை கொடுத்து அசத்தி வருகிறது மாநாடு படக்குழு.
அந்த வகையில் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது. டிரைலர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.சமீபத்தில் கூட பேசிய இந்த படத்தில் நடிதுயுள்ள இயக்குனரும், நடிகருமான சூர்யா படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போனார்.
அந்த அளவுக்கு மிக சூப்பராக இருப்பதாக சொல்லி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் மாநாடு படத்தின் விமர்சனம் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது இன்சைடு பிளாக்பஸ்டர் மூவி என தற்போது விமர்சிக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியை மிரட்டும் அளவில் இருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை வேற லெவல் என்றும், இந்த படம் 2021 மாநாடு மிகப்பெரிய ஒரு blockbuster படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இச்செய்தி நடிகர் சிம்பு மற்றும் ரசிகர்கள் சமூக வளைத்தளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Blockbuster inside report for #Maanaadu
Bang intervel sequence#STR 🤜🏼🤛🏼 #SJSurya 🔥🔥
Vera level U1 BGM
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 29, 2021