யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘யானை முகத்தான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

yaanai-mukadhan
yaanai-mukadhan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு தொடர்ந்து தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை ஓவர் டெக் செய்யும் அளவிற்கு பிஸியாக இருந்து வரும் நடிகர் என்றால் அது யோகி பாபு தான்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு தளபதி விஜயின் வாரிசு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாக இருக்கும் தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர் சியின் காஃபி வித் காதல் & தலைநகரம் 2, பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு நகைச்சுவை நடிகராக கலகலப்பான காமெடி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு அந்த வகையில் இவருடைய நடிப்பில் பூச்சாண்டி,சலூன், காசேதான் கடவுளடா, மெடிக்கல் மிராக்கள் மற்றும் பூமர் ஆங்கில் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது இவ்வாறு தொடர்ந்த நகைச்சுவை திரைப்படங்கள் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாறுபட்ட வேடத்தில் இருக்கும் பொம்மை நாயகி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு.மேலும் மிகவும் என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி வரும் யானை முகத்தான் என்ற படத்திலும் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தினை பிரபல மலையாள இயக்குனர் ரெஷின் மிதிலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து யோகி பாபுவுடன் இணைந்து ஊர்வசி, ரமேஷ் திலக் கருணாகரன் ஆகியோர்கள் யானை முகத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் இன்ஃபோகஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் Front Row புரொடக்சன்ஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் யோபு பாபுவின் யானை முகத்தான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்.