மாஸாக வந்த வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” – படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

vadivelu

90 காலகட்டங்களில் காமெடியனாக அறிமுகமாகி பின் படிப்படியாக தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முக்கிய கதாபாத்திரங்களிலும் மற்றும் ஹீரோவாகவும் வெற்றி கண்டவர் வைகைப்புயல் வடிவேலு. சினிமா உலகில் காமெடி என்பதை பேச்சின் மூலம் வர வைப்பார்கள்.

ஆனால்  நடிகர் வடிவேலு  அடி வாங்கினால் கூட சிரிப்பாக இருக்கும் ஒவ்வொரு காமெடியிலும் அடி வாங்கும்போது பலரையும் சந்தோஷப்படுத்தி அந்த அளவிற்கு சிறப்பாக நடித்து அசத்துவார் இதுதான் அவரது ஸ்டைலும் கூட இப்படி வெள்ளித்திரையில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த வடிவேலு சில பிரச்சனைகள் காரணமாக சினிமா உலகில் நான்கு வருடங்கள் நடிக்காமல் போனார்.

ஒருவழியாக பிரச்சனை சுமூகமாக பேசப்பட்டு அதிலிருந்து தற்போது வடிவேலு வெளியேறி உள்ளார் வெளிவந்த உடனேயே தற்போது ஹீரோவாகவும் காமெடியாகவும் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் முதலாவதாக சுராஜ் உடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன் மிகப்பெரிய அளவில் தயாரிக்க இருக்கிறது.   படக்குழு முதலில் நாய் சேகர் என்ற தலைப்பை வைத்தது ஆனால் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் படத்திற்கு அந்த தலைப்பு வழங்க பட்டு இருந்ததால்  திடீரென இயக்குனர் சுராஜ் படத்தின் தலைப்பை சிறிதளவு மாற்றி நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் இந்த படத்தை  எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ வைகைப்புயல் வடிவேலு செம்ம மாஸாக கெத்தாக இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.

naai sekar returns
naai sekar returns