தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் விஷால் இவர் நடித்து வரும் திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிகம் கவரவில்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் இவர் தற்பொழுது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த பர்ஸ்ட் லுக்கில் விஷால் நீண்ட துப்பாக்கியுடன் தலை குனிந்தவாறு இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாகவும் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் இந்த திரைப்படத்திற்காக தமன் இசையமைத்து வருகிறார் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பு அடுத்த வருடம் கோடை விடுமுறையில் தன் வெளியிடப்படும் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுமா பெறாத என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.