தளபதி விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 66வது படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி யுடன் கைகோர்த்து முதல்முறையாக நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக விஜய் நெல்சன் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு வசூலைப் பெற்ற நிலையில் தனது அடுத்த படம் நல்ல ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி 66 படக்குழுவே மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த படம் அடுத்தாண்டு பொங்கலன்று வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்ததையடுத்து படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது அதன் புகைப்படங்கள் கூட சில சமூக வலைதளங்களில் கசிந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஜெயசுதா போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருவதால் படம் வேற லெவலில் உருவாகி வருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தளபதி 66 படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து தற்போது தளபதி 66 படத்தின் டைட்டிலுடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வாரிசு என அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது இதனை தற்போது விஜய் ரசிகர்கள் பலரும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022