தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஜோதிகா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்துள்ளார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சிறிது காலங்கள் சினிமாவில் திரைப்படங்களின் நடிக்காமல் இருந்து வந்த இவர் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ ஏன்ட்ரி.
அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடிக்காமலும் இருந்தார். அந்த வகையில் கடந்த வருடம் உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு மலையாள திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
அந்த மலையாள படத்தில் நடிகை ஜோதிகா மம்முட்டி அவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார். மம்முட்டி அவர்கள் இந்த கதாபாத்திரத்திற்கு ஜோதிகா தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து அவரிடம் நடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் அதன் காரணமாக மட்டுமே ஜோதிகா மற்ற திரைப்படங்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சம்மதித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது காதல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரில் ஜோதிகா மம்முட்டி இருவரும் எதையோ பார்த்து மிகவும் அழகாக சிரித்தபடி ரசித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அந்த போஸ்டரில் அந்த படத்தின் தலைப்பு காதல் என்ற வார்த்தையும் கவிதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ஜோதிகாவிற்கு தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மலையாளத் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே இந்த படத்தில் தலைப்புக்கு ஏற்றார் போல் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் அழகாக காட்டப்படும் என்றும் கனமான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.