நடிகர் சூர்யா எப்போதும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம். அந்த வகையில் சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிய வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படம் நிச்சயம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் சூரியாவும் பாலாவும் இதற்கு முன்பு நந்தா, அவன் இவன், பிதாமகன் போன்ற படங்களில் கைகோர்த்து வெற்றி பெற்றுள்ளனர் அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் ஏதாவது ஒரு நல்ல செய்தி வெளிவரும் என கூறப்பட்டது.
அதன்படி பாலா – சூர்யா பணியாற்றி வரும் புதிய படத்திற்கு வணங்கான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது மேலும் சூர்யா மீனவராக நடிக்கிறார் அதன் போஸ்டர் கூட தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்துக்களை சொல்லி உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..