பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! இயக்குனர் இவர் தானாம்.!

pichaikaran
pichaikaran

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளவர்  இசையமைப்பாளர், நடிகருமான விஜய் ஆண்டனி ஆவார். இவர் நடிகராக ஆவதற்கு முன்பாக இசையமைப்பாளராக பல படங்களில் தனது சிறந்த இசையை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நான் படத்தில் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எனக்கு நடிப்பு வரும் என்பதை தமிழ் சினிமா உலகிற்கு வெளிக்கட்டினார்.

இப்படமே சிறந்த வெற்றியை கொடுத்தது இப்படத்தை தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் இத்திரைப்படம் பல விருதுகளையும் தட்டிச் சென்றது. பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக தெரிய வந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

vijay antony and wife
vijay antony and wife

இதற்கு முக்கிய காரணம் என்று விஜய் ஆண்டனி அவர்கள் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் இதன் காரணமாக தற்போது  பிச்சைக்காரன் படத்தின் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது இது குறித்து விஜய் ஆண்டனியின் மனைவியும் ,தயாரிப்பாளரும் ஆன பாத்திமா அவர்கள் கூறியது.முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் விஜய் ஆண்டனி முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பிச்சைக்காரன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை விஜய் ஆண்டனி அவர்களே எழுதி முடித்துள்ளார்.இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்கினார்.  இப்படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி மக்களிடையே பொதுவாக எழக்கூடிய ஒன்றுதான் முதல் பாகத்தை இயக்கி இயக்குனராக அல்லது வேறு யாராவது இந்த படத்தை இயக்க உள்ளனரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது வழக்கம்.

pichaikaran 2
pichaikaran 2

இது குறித்து பேசிய பாத்திமா அவர்கள் தேசிய விருது வென்ற பரதம் படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி என்கின்ற பெண் பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கவுள்ளார். அதனை பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.