தாரை தப்பட்டைக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம் விஜய்யின் மாஸ்டர் ரிலிஸ் ஆகும் நாள் இதுதான்.!

vijay

இளையதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

இதனையடுத்து இந்தத் திரைப்படத்திற்காக விஜய் முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த தகவல் என்னவென்றால் திரையரங்க சங்க தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி 2021ல் திரையரங்குகளில் வெளியாகஉள்ளது என கூறியிருக்கிறார்.

மேலும் தளபதி விஜயின் அடுத்த 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப்போகிறார் என அதிகாரபூர்வ தகவல் சமீபத்தில் வெளியாகி வந்ததை நாம் பார்த்தோம் தளபதி 65வது திரைப்படம் கூடிய சீக்கிரத்தில் எடுக்கப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

vijay
vijay