விஜயின் “அரபி குத்து” பாடலுக்கு சட்டை பட்டனை திறந்து விட்டு நச்சின்னு ஒரு குத்தாட்டம் போட்ட DD – வைரல் வீடியோ இதோ.

dd
dd

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனரான நெல்சனுடன் முதல் முறையாக இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெருமளவு வசூலை வாரிக்குவித்த டாக்டர் திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அரபி குத்து பாடல் தற்போது மக்களிடையே வெளியாகி  ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வந்த சில நாட்களிலேயே பெரும் சாதனை செய்து தற்போது வரை 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு விஜயை போல் நடனமாடி பல பிரபலங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த அரபி குத்து பாடலுக்கு நடிகை சமந்தா, யாஷிகா ஆனந்த், சாக்ஷி அகர்வால் போன்ற பல பிரபலங்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இது நிலையில் அவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி பிரபல தொகுப்பாளரான திவ்யதர்ஷினி என்கின்ற டிடி அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இந்த டிடி வெளியிட்டுள்ள நடன வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் ரசிகர்களிடையே இந்த வீடியோ லைக்குகளையும் குவித்து வருகின்றன. இதோ அந்த வீடியோ.