தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் அடியெடுத்து வைத்தாலும் மக்கள் மத்தியில் சிறப்பான படத்தை கொடுக்க தவறுகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் இயக்குனர் மோகன்ஜி.
திரௌபதி என்னும் பிரமாண்ட ஹிட் படத்தை கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் பல நாள் காத்து இருந்து திரையரங்கில் வெளியானது.
தற்போது கூட மக்கள் கூட்டம் இந்த படத்தை அதிக அளவில் பார்த்துக்கொண்டு வருகின்றனர். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்களின் கூட்டம் மட்டும் குறையாமல் இருந்து வருகிறது. மேலும் ரிசர்டு ரிஷி தற்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால் அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் கூட நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் அக்காவும், நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் ஆகியவர்கள் திரையரங்கில் வந்து படத்தை கண்டு களித்தனர். இந்த நிலையில் ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சமீபத்தில் வெளியானது அதை தொடர்ந்து தற்போது மூன்றாம் நாள் வசூல் நிலவரமும் வெளியாகியுள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 7.25 கோடி வசூல் சாதனை செய்து அசத்தியுள்ளது. இப்படி போய்க்கொண்டிருந்தால் மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் என சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் கருதியுள்ளனர்.