தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் மக்கள் மன்றமும் ரசிகர்களின் மனநிலையை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் வெற்றியை தீர்மானிக்கின்றன.
மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து இவர் நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்த டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் இந்த படத்தை கண்டு களித்து கொண்டுதான் வருகின்றன. மேலும் படத்தை பார்த்த பிரமுகர்களும் ரசிகர்களும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நல்லவிதமான விமர்சனத்தையே கூறி வருவதால் மென்மேலும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
திரைப்படம் தற்போது வசூல் வேட்டையில் தொடர்ந்து பல கோடிகளை குவித்து வருகின்றன. இதனால் சிவகார்த்திகேயனின் கேரியரில் இது ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் அதிக வசூல் செய்த படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த திரைப்படமும் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் ஐந்து நாட்களில் இந்த திரைப்படம் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்ற நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி பார்கையில் சிவகார்த்தியன் டாக்டர் திரைப்படம் இதுவரை 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் இன்னும் பல கோடிகளை அள்ளி ஒரு புதிய மைல்கல் சாதனை படைக்கும் என கூறுகின்றனர்.