சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருந்தது மேலும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவும் இருக்கிறார்.
இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள். சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் தற்போது இரண்டாம் பாகத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசித்து வந்த நிலையில் நடிகை அனுஷ்காவை சந்தித்து பட குழு ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க ஒத்துக் கொள்வீர்களா என கேட்டு வந்தார்களாம்.
அதற்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லையாம் இதனால் தற்பொழுது ராகவா லாரன்ஸ் நேரடியாக அவருக்கு போன் கால் செய்து கேட்டுள்ளார் என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதில் அனுஷ்காவிற்கு போன் செய்து ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நீங்கள் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டாம்.
ஆனால் உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தனி கதாநாயகி கதாபாத்திரம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளாராம்.இதனால் கூடிய சீக்கிரம் நடிகை அனுஷ்கா சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க வருவார் எனவும் தகவல் கிடைத்துள்ளது இவர் நடித்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிடும்.
அதிலும் குறிப்பாக ராகவா லாரன்ஸ் கடந்த சில வருடங்களாகவே த்ரில்லர் கதை களம் கொண்ட திரைப்படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதேபோல் இந்த திரைப்படமும் இவருக்கு கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி தெரிவித்து வருகிறார்கள்.