விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து விஜய் டிவி அடுத்தடுத்து சீசன்களை ஒளிபரப்பி வந்த நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் அறிமுகமாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.
இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியினை ஒரு வெற்றிப்பாதையாக தேர்ந்தெடுத்து பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆர்வத்தை காண்பித்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஐந்தாவது சீசன் பெரிதாக டிஆர்பி-யில் வெற்றி பெறாத நிலைகள் ஆறாவது சீசன் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து முதன்முறையாக 20 போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று கிராண்ட் ஓபனிங் அமோகமாக கமலஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்தது இப்படிப்பட்ட நிலையில் 20 போட்டியாளர்களில் ஒருவராக சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமியை பங்கு பெற்ற உள்ளார் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்த சீரியலிற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர் பிறகு சின்னத்திரை நடிகர் விக்னேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறிய தகவலை பார்த்து ரசிகர்கள் இவர்களுக்கு விவாகரத்து ஆனது என்ற தகவல் வதந்தியா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.