அருண் விஜயின் சினம் பட ப்ரோமோ விடியோ இதோ…

sinam
sinam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய். சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

அந்த சமயத்தில் அஜித், விஜய், நிகராக இருந்த நடிகர்களில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நடிகர் அருண் விஜய்க்கு சினிமாவின் இடைப்பட்ட காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு  கிடைக்காமலும் கிடைத்த பட வாய்ப்புகள் கதை ஏதும் இல்லாததாலும் இவருடைய படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் இவருக்கு பட வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது.

அதன் பிறகு சினிமாவில் நீண்ட காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார் நடிகர் அருண் விஜய் அவருக்கு அப்படி கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இந்த திரைப்படம் நடிகர் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டானார் நடிகர் அருண் விஜய். அப்படி  ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் யானை இந்த திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வர வேர்ப்பு பெற்றது.

மேலும் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பாஸ்டர் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன இந்த வரிசையில் அடுத்ததாக கவனத்தை ஈர்த்து வரும் திரைப்படம் தான் சினம் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜி என் ஆர் குமரவேலன் அவர்கள் இயக்கியத்தில் அருண் விஜய் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் சினம். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ.