தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருக்கும் அஜித் – விஜய் இணைந்து எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் இதோ.!

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நிஜ வாழ்கையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் இவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய நாட்களில் படங்களில் மூலம் மோதிக் கொண்டுள்ளனர்.

ஆனால் அண்மை காலமாக தனித்தனியாக படங்களை ரிலீஸ் செய்து வலம் வருகின்றனர் இருப்பினும் ரசிகர்கள் யார் படத்தின் வசூல் அதிகம் என்பதை அறிந்து கொண்டு சமூக வலைதளங்களின் மூலம் போட்டி போட்டு தான் கொண்டு இருக்கின்றனர் எது எப்படியோ..

இவர்கள் இருவரை பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. தற்பொழுது அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்க இருக்கிறது.

இவரைப் போலவே நடிகர் விஜயும் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து  பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, குஷ்பு மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இருவரும் இப்படி படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க இவர்கள் பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வெளிவந்துள்ளது அதாவது பல வருடங்களுக்கு முன்பு அஜித்தும், விஜய்யும் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

ajith and vijay
ajith and vijay