தமிழ் சினிமாவில் ஒரு சில ஜாம்பவான்கள் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வில்லை என்றாலும் ரசிகர்கள் கூட்டம் அவர்களை கொண்டாடுவார்கள் அதற்கு காரணம் அவரது திறமை என கூறப்படுகிறது அந்த வகையில் சிவாஜி, கமல் போன்றவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிக சிறப்பாக நடித்து வருபவர் விக்ரம்.
திரை உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துள்ளதால் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது இருப்பினும் சமீப காலமாக விக்ரம் பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வில்லை என்பதால் இவர் நடித்துவரும் படங்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி உள்ளது.
அந்த வகையில் சீயான் 60 மற்றும் கோப்ரா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. முதலில் திரைப்படத்திற்கும் சீயான் 60 திரைப்படம் வரும் என கூறப்படுகிறது ஏனென்றால் படக்குழு விருவிருப்பாக படத்தை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்தவுடன் படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமிப காலமாக நடிகர் விக்ரம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது அந்த வகையில் விக்ரமின் சொத்து மதிப்பு மற்றும் கார் ஆகியவை பற்றிய செய்திகளை நாம் பார்த்த நிலையில் தற்போது அவர் வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.