பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு தன்னுடைய மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற காரணத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தவர்கள். அப்படி திருமணம் செய்து கொண்டவர்களும் பெரும்பாலும் தங்களுடைய கணவருடன் சேர்ந்து வாழாமல் குறிப்பிட்ட காலத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் பிரபல முன்னணி நடிகை ரேவதி இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளிர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் நடிகை ரேவதி நடிகர் சுரேஷ் சந்திரா மேலனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்த நடிக ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பேட்டி ஒன்றில் தனக்கு ஐந்து வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இறப்பதாக கூறியிருந்தார் இது பலரையும் ஆச்சரியமடைய வைத்தது. பிறகு இது குறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன்.
இதன் மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தேன் ஆனால் இது பலருக்கும் தெரியாது நான் அந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தையை நான் தான் பெற்றெடுத்தேன் என கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில் ரேவதி தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு 47 வயதில் இந்த குழந்தையை ரேவதி பெற்றெடுத்தார் நடிகை ரேவதி தற்பொழுது வயதானாலும் கூட தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.