மக்கள் மற்றும் ரசிகர்களை சமீப காலமாக கவர்ந்து இழுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் சமீபத்தில் ஐந்தாவது சீசன் தொடங்கி உள்ளது . வழக்கம்போல் உலகநாயகன் கமலஹாசன் இந்த சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் டாஸ்க் ஆக கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி கூறினர். பின்பு ஒரு வாரம் முடிவதற்கு உள்ளே நமிதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேறினார்.
பின்பு முதல் வாரத்தில் எலிமினேஷன் ஏதுவும் இல்லை. ஆகையால் அடுத்த வாரம் எலிமினேஷனில் குறைந்த வாக்குகளை பெற்று நாடியா சாங் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுவரை பெரிதாக பிக்பாஸ் வீட்டில் சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் இந்த வாரத்தில் இருந்து சின்ன சின்ன சண்டைகள் ஆரம்பித்துள்ளன.
தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் சிலர் சிறு சிறு குழுக்களாக இருந்து வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரபல ரேப் பாடகி ஐக்கி பெர்ரி. இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அது மட்டுமல்லாமல் இவர் டாக்டர் என கடந்து வந்த பாதை டாஸ்கில் அவரே கூறியிருந்தார்.
சமீபத்தில் இவரது காதலன் புகைப்படம் கூட இணையதளத்தில் வைரல் ஆகியது. இந்தநிலையில் தற்போது ஐக்கி பெர்ரி அவரது அம்மா அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம் நீங்களே பாருங்கள்.