தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களின் படங்களை சமீபகாலமாக புதுமுக நடிகைகள் தான் கைப்பற்றி நடித்து வருகின்றனர் தளபதி விஜயுடன் டாப் நடிகைகள் நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் தான் பெரிதும் நடித்து வந்தனர் ஆனால் தற்பொழுது அவர்களையே ஓவர்டேக் செய்து தற்பொழுது விஜய்யின் படத்தை கைப்பற்றிய அவர்தான் நடிகை பூஜா ஹெக்டே.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வரும் பூஜா ஹெக்டே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததால் தற்போது விஜய்யின் வாயை இருக்கமாக பிடித்து தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடனங்களை கற்று கொண்டு வருவதோடு ஸ்பீடாக ஆட தொடங்கி விட்டாராம்.
இதனால் படக்குழுவினர் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர் மேலும் சொன்ன நேரத்தில் கரெக்டாக வந்து விடுவாராம் பூஜா ஹெக்டே இதனால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் பல நடிகர்களுடன் ஜோடி போடுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன இந்தப் படத்தின் ஷூட்டிங்கை செல்லும்போதெல்லாம் பீஸ்ட் படத்தின் அப்டேட் மறைமுகமாக சொல்லிக் கொண்டுதான் வந்துள்ளார். இது ரசிகர்களுக்கு செம துள்ளல் ஆட்டத்தை போட வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார்.
நேற்று பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆனால் எதுவும் நடக்கவில்லை ஆனால் பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் வெளிவந்தன. பீஸ்ட் படத்தில் இவருடன் இணைந்து நடிக்கும் அபர்ணா தாஸ் பூஜா ஹெக்டேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.