சினிமா உலகில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதனை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக அப்படத்தினை சிறு தொகுப்புகளாக யூடியூப், டிவி சேனலில் வெளியீட்டு விளம்பரப்படுத்துவது வழக்கம் அப்படி தென்னிந்திய சினிமாக்களில் உள்ள பல படங்களின் டீசர், டிரைலர், பாடல் போன்றவை யூடியூப் சேனல் வழியாக வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியாகி அதிக லைக்குகளை பெற்ற தென்னிந்திய திரைப்பட வீடியோக்கள் என்னவென்று தற்பொழுது நாம் பார்க்க உள்ளோம்.
ஐந்தாவது இடத்தில் தளபதி விஜய் அவர்கள் தற்போது நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்துள்ள குட்டி ஸ்டோரி 1.7 மில்லியன் பேர் பார்த்து லைக்குகளை அள்ளி வீசியுள்ளனர்.
நான்காவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்திய பிகில் படத்தின் ட்ரெய்லர் 2.3 மில்லியன் பேர் இதனை லைக் செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமா நாயகன் அல்லுஅர்ஜுனின் புட்ட பொம்மா பாடல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது இப்பாடலை சுமார் 2.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
இரண்டாவது இடமாக தனுஷ் நடித்து பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை 2.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
முதல் இடத்திலும் தனுஷ் அவர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி என்ற பாடல் 3.6 மில்லியன் பேர் இதனை லைக் செய்துள்ளனர்.