சினிமாவுலகில் எங்கேயோ ஒரு மூலையில் ஆரம்பத்திலிருந்து இருந்தாலும் பின் படிப்படியாக தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர் அந்த வகையில் ரஜினி, அஜித் சிவகார்த்திகேயனை போன்று தற்போது வளர்ந்து உள்ளவர் நடிகர் யோகிபாபு.
இவர் முதலில் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியிக் ஒரு ஓரத்தில் நடித்திருந்தார் யோகிபாபு பின் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். முதலில் படங்களில் வில்லனுக்கு அடியாராகவும், காமெடியனாக ஒரு ஓரத்திலும் நின்றுவர் யோகி பாபு ஆனால் இப்பொழுது அவரது சினிமா பயணத்தை மாறிப் போயுள்ளது.
இப்போ எடுத்துப் பார்த்தோமானால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். ஹீரோக்கள் படங்களில் டாப் ஹீரோயின்கள் தொடர்ந்து நடிக்கிறாரோ இல்லையோ யோகி பாபு இருக்கிறார் அந்த அளவிற்கு இவரது வளர்ச்சியை அமோகமாக இருந்து வந்துள்ளது.
காமெடியனாக பின்னி பெடல் எடுப்பதோடு மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர் யோகி பாபு. சினிமா உலகில் தற்போது அசைக்க முடியாத மன்னனாக வலம் வரும் யோகி பாபு தொடர்ந்தும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் பார்கவி என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
யோகி பாபுவின் குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆகியதையடுத்து மிக பிரபலமான கொண்டாடப்பட்டது இந்த பிறந்தநாள் விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், பாக்கியராஜ் மற்றும் பல பிரபல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.