குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்கள் வெளியிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருபவர் தான் நடிகை அனிகா.இவர் அஜித்தின் ரீல் மகளாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக செய்து வந்த இவர் தற்பொழுது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று உள்ளார். இவர் அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அஜித் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் இவர்களுடைய மகளாக நடித்திருந்தார்.மேலும் இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் அடித்த பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.
மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படிப்பட்ட நிலைகள் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் இவர் தற்பொழுது தெலுங்கில் புட்ட பொம்மா என்ற திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் மிகவும் ட்ரெண்டாக இருந்து வருகிறது. மேலும் இவர் நடித்து வரும் புட்ட பொம்மா திரைப்படத்தின் தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்பதை பற்றிய தகவல் இதுவரையிலும் வலி வரவில்லை.
இவ்வாறு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் இவர் தற்பொழுது சுடிதாரில் குடும்பப் பெண் போன்ற லுக்கில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மா என்ற குறும்படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் சிறுவயதில் வயதுக்கு வந்த சிறுமி கர்ப்பிணி ஆகுவது போன்றும்,அதை அறிந்து கொள்ளும் தாய் அந்த சிசுவை கலைத்து விடுவது போன்றவும் இருக்கும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தினை தளபதி விஜயின் திரைப்படத்தினை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்க மணி நாகராஜ் இயக்கத்தில் சிசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கதாநாயகியாக அனிகா நடித்துள்ளார். இவ்வாறு இவருடைய போஸ்டர்களை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா விட்ட இடத்தினை குட்டி நயன்தாரா பிடிப்பார் என கூறி வருகிறார்கள்.