ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர்தான் தமன்னா இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின்பு கல்லூரிதிரைப்படத்தில் இவர் நடித்த பொழுது இவருக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துவிட்டது கல்லூரி திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று விட்டது.
அதிலும் குறிப்பாக இவர் விஜய்,அஜித்,தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போனது ஒரு கட்டத்தில் இவர் மார்க்கெட் உச்சத்தில் புகழ்பெற்று விளங்கினார் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்து தமன்னா தற்போது சின்னத்திரையிலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆம் நடிகை தமன்னா தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை இவர் தெலுங்கில் தொகுத்து வழங்கி வருகிறார் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள் மேலும் சமீப காலமாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகர்கள் மற்றும் பல நடிகைகளின் வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் தற்பொழுது நடிகை தமன்னாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆம் இவரது வீட்டின் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்களே அதிர்ச்சி ஆகி விடுவார்கள் அந்த அளவிற்கு இவரது வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் தமன்னா நடிக்கும் திரைப்படங்களை ஆவலாக எதிர்பார்த்து வருகிறோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.