குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருதிகாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இதோ.

shruthika
shruthika

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சி முதல் மற்றும் இரண்டாவது சீசன் மக்களிடையே நல்ல ரீச் ஆனதை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி மக்கள் பலரின் ட்ரஸ் பஸ்சர் நிகழ்ச்சியாக அமைகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டுள்ள புகழ், சிவங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா போன்ற அனைத்து பிரபலங்களும் வாரம் வாரம் புதுப்புது கெட்டப்புகளில் வந்து போட்டியாளர்கள் மற்றும் மக்களை  பெரிதும் என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் ஸ்ருதிகா இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவர். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படி ரீச் அடையவில்லை.

shruthika
shruthika

அதனால் பின்பு குடும்ப வாழ்க்கையில் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஆரவ் என்ற ஒரு மகனும் உள்ளார். இப்படி குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வந்த ஸ்ருதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவரது இன்னசன்ட் ஆன பேச்சு தற்போது ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

shruthika
shruthika

இதனிடையே தற்போது மீடியா உலகில் பிரபலமாகிவரும் ஸ்ருதிகா அவரது வீட்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ருதிகாவிற்கு இவ்வளவு பெரிய வீடா, வீடு மிகவும் அழகாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள்.

shruthika
shruthika
shruthika
shruthika