தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கார்த்திக் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக கலைமாமணி விருது நந்தினி விருது பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசு கொடுத்த விருது என பல்வேறு விருதுகளை வாங்கி தன்னுடைய கவுரவத்தை நிலைநாட்டினார்.
அந்த வகையில் நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம் என்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் மட்டுமில்லாமல் இன்றளவில் கூட நடிகர் கார்த்திக்கின் ஒரு சில திரைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் தேடிப் பார்ப்பது வழக்கம் தான் அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி விருது பெற்ற ஆறு திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்திக் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்திற்கு தமிழக அரசால் சிறந்த அறிமுக நாயகன் என்ற விருது வழங்கப்பட்டு கார்த்திக்கு பெருமை சேர்த்தது.
அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படமானது நடிகர் கார்த்திக் மற்றும் பிரபு ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது.
வருஷம் 16 இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்ததுமட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிகை குஷ்பு நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
கிழக்கு வாசல் சென்ற திரைப்படமானது கார்த்திக் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது இந்த திரைப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரேவதி நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் கார்த்திக் பிலிம்பேர் விருதை தட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து பொன்னுமணி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடிகர் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்கும் நடிகர் கார்த்திக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.