தமிழ்சினிமாவில் பன்முக தன்மை கொண்டவராக விளங்கி வருபவர் ஆபாவாணன். இவர் தமிழ் சினிமா உலகில் திரைக்கதை, பாடல் வரிகளில், எழுதுவது, இசையமைப்பது, தயாரிப்பது போன்ற பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி மற்ற சினிமா பிரபலங்களுக்கு முன்னோடியாக தற்பொழுது வரை இருந்து வருகிறார்.
ஆபாவாணன் தயாரித்து மிகப்பெரிய வெற்றி கண்ட படங்களின் லிஸ்ட் தற்போது பார்க்க உள்ளோம்.
1.காவியத் தலைவன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அவர்கள் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் காவியத் தலைவன். இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக பானுப்ரியா மற்றும் நம்பியார், மனோரமா ,மஞ்சுளா, நாசார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இப்படம் திரையரங்கில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது இப்படத்தை ஆபாவாணன் கதை, திரைக்கதை, தயாரிப்பு போன்றவற்றை இப்படத்திற்காக கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2.இணைந்த கைகள்
90 காலகட்டங்களில் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் இணைந்த கைகள். இப்படத்தில் அருண்பாண்டியன், ராம்கி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஒரு மாற்றினார்கள் இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது இப்படத்தை ஆபாவாணன் தயாரித்து கதை எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.
3.ஊமைவிழிகள்.
ஆபாவாணன் தயாரித்து எழுதிய முதல் திரைப்படம் ஊமைவிழிகள். இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை கொண்டு எடுக்கப்பட்ட படம். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய காரணம் இசை மற்றும் ஒளிப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் அருண்பாண்டியன் சந்திரசேகர் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் போன்ற மிகப்பெரிய நடிகர் போட்டாலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் தியேட்டர்களில் வெளிவந்து 150 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விஜயகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
4.செந்தூரப்பூவே.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் செந்தூரப்பூவே. இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் இப்படத்திற்காக பல விருதுகளை தட்டிச் சென்றார் இப்படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து ராம்கி ,நிரோஷா, சந்திரசேகர் ,ஸ்ரீபிரியா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இப்படம் திரையரங்குகளில் வந்து யார் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது என்பது குறிபிடத்தக்கது.
5.உழவன் மகன்.
விஜயகாந்த் ராதிகா நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் உழவன் மகன் இப்படத்தை ஆபாவாணன். அவர்கள் கதை திரைக்கதை எழுதி வெளிவந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது அதுமட்டுமில்லாமல் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
ஆபாவாணன். அவர்கள் குறைந்த படங்களை எடுத்திருந்தாலும் அத்தகைய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன இதன் மூலம் தமிழ் சினிமாவில் மற்ற சினிமா பிரபலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் இத்தகைய படங்கள் இன்றளவிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்து உள்ளது.