கயல் ஆனந்தி போன்று செம்ம க்யூட்டாக, ஸ்லிம்மாக இருக்கும் அவரது அம்மா.! பேசாம அவங்களையே படத்தில் நடிக்க வைக்கலாம் என கூறும் ரசிகர்கள்.

kayal-anandhi
kayal-anandhi

தமிழ்  சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் ஆனந்தி. இவர் பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை தொடர்ந்து குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் கயல் என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இப்படத்தின் மூலம் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்றினார். இப்படம் அவருக்கு புனை பெயரையும் உருவாக்கி தந்தது இப்படத்தினை தொடர்ந்து அவரின் பெயர் கயல் ஆனந்தி என்றே ரசிகர்கள் மட்டும் பிரபலங்கள் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் விசாரணை,சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பரியேறும் பெருமாள்,மன்னர் வகையறா போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு மாறினார். தற்பொழுது  கயல் ஆனந்தி  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிலையாக பிடிக்க முயற்சித்து கொண்டு வருகிறார்.

தனது சிறந்த நடிப்பின் மேலும் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ள கயல் ஆனந்தி அவ்வபோது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படத்தை பகிர்வதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட தனது பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க அம்மாவா இப்படி இருக்கிறார்கள் பேசாமல் உங்க அம்மா படத்தில் நடிக்க வரலாமே என கூறியும்  வருகின்றனர் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

kayal ananthi family
kayal ananthi family