நடிகை அஞ்சலி “போட்டோ” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த வந்த இவர் “கற்றது தமிழ்” என்னும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் முதல் படத்திலிலேயே இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்பொழுதும், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகை அஞ்சலிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அடுத்தடுத்த குவிந்தோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் குவிந்தனர்.
திரை உலகில் பிஸியான நடிகையாக பார்க்கப்பட்ட இவர் நடிகர் ஜெயுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது எனக் கூறி முடித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் படங்களில் நடிப்பதை விட தெலுங்கில் அதிகம் ஆர்வம் காட்டினார்.
குறிப்பாக 2021 லிருந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் அதிகமா ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் 2023 -ல் மலையாளத்தில் ஒரு படமும், தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் எடுத்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அஞ்சலி பேட்டி ஒன்றில் தனக்கு வர போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என கூறி உள்ளார்..
எல்லோருக்கும் நல்ல பையனை திருமணம் செய்யுங்க என தெரிவித்துள்ள இவர் என்னை பொருத்தவரை நல்ல பையன் என்றால் திருமணத்திற்கு பிறகு மரியாதை கொடுக்க வேண்டும் அதன் பிறகு தான் அன்பு, காதல் எல்லாம் எனக் கூறியுள்ளார். அப்படி இருக்கும் ஆண்களை தான் தனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.