ரோஜாவை தொடர்ந்து சினிமாவிற்கு வரும் அவரது மகள்…! எந்த ஹீரோ படத்தில் தெரியுமா.?

roja-
roja-

90 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் ஏக்கப்பட்ட டாப் ஹீரோயின்கள் இருந்தனர். அவர்களின் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை ரோஜா. இவர் பிரபு, பிரபுதேவா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார்.  நடிகை ரோஜா இவர் 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி என்னும் படதில் நடித்த அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் சூரியன், அசுரன், ஹவுஸ்புல், சின்ன ராஜா, ஊட்டி,  ஏழையின் சிரிப்பில், ராசையா, பொட்டு அம்மன், கோட்டை மாரியம்மன், அரசு என பல படங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தது ஓடினார் மேலும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில் நடிகை ரோஜா கிளாமர் காட்சிகளிலும் நடித்து அசத்தினார்.

சினிமா உலகில் வெற்றியை ருசித்த இவர் 2002 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றனர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ரோஜா சினிமா உலகில் நடிக்கவில்லை. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் அவ்வபோது தலை காட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக தற்போது அரசியலில் குதித்து தற்பொழுது நல்லதொரு பதவியில் இருந்து வருகிறார்.  இப்படி இருக்கின்ற நிலையில்  ரோஜா பற்றி ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது நடிகை ரோஜாவை தொடர்ந்து அவரது மகள் அன்ஷுமாலிகா நடிக்க தொடங்கி உள்ளார் அதுவும் எடுத்தவுடனேயே விக்ரமின் மகன்..

roja
roja

நடிகர் துருவ் விக்ரம் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளி வருகின்றன. இதை அறிந்த ரசிகர்கள் பரவாயில்லை நடிகை ரோஜாவை தொடர்ந்து அவரது மகள் வருவது நல்லதொரு விஷயம் எனக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

dhruv vikram
dhruv vikram