சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்ப பட்டு வந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலை காண மக்கள் தொலைக்காட்சி முன்பு காத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த நிலையில் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் சித்ரா, இவர் இந்த சீரியல் நடிப்பதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலையை பல ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் தற்கொலையில் ஏதோ மர்மம் இருப்பதாக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூறிவந்த நிலையில் விசாரணையை முடக்கி விட்டார்கள் போலீசார்.
அதில் பல திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் மற்றும் சித்ராவின் அம்மா கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார், இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேமந்த் தந்தை சென்னை காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். சமூக வலைதளத்தின் மூலம் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளதாகவும் இதில் நிச்சயதார்த்தம் வரைச் சென்று திருமணம் நின்றதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்ரா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் என்பவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் வைத்து ரக்ஷன் சித்ராவை மிரட்டி உள்ளதாகவும் சமூக வலைதளத்தின் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது. மேலும் சித்ரா ஒருசில நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் பதட்டத்துடன் தனியாக சென்று போன் பேசுவார் என்றும் பின்பு அந்த என்னை அழித்து விடுவார் என்றும் ஹேமந்த் என்னிடம் கூறியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
சித்ராவின் தற்கொலையில் முக்கிய புலிகள் இருப்பதாகவும் இந்த நிலையில் அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா பேசுவார் எனவும் சித்ரா திருமணம் செய்தால் பல ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்தவும் தயாராக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக ஹேமந்த் தந்தை அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் சித்ராவிற்கு திருமணம் நடந்தால் அந்தப் பிரபலம் குறைய தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்கள் மிரட்டல் விடுத்தது இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது, சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் சிசிடிவி காட்சிகளை அழித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன, சித்ராவின் தற்கொலையில் ஒரு பக்கமாக தான் விசாரணை நடத்தி வருகிறார்கள் பெண் வீட்டாரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கை வெளிப்படையாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறியுள்ளார், மேலும் தனது மகனை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என ஹேமந்த் தந்தை கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் தப்பு பண்ணிட்டு சித்ரா மேல பழி போடுரிங்களா என கொந்த்தளித்து ட்வீட் போட்டுள்ளார்கள்.