சித்ராவின் மரணம் குறித்து அவரது வருங்கால கணவரான ஹேமந்த் அவர்களை விசாரித்த போது பல உண்மைகள் தெரிய வந்துள்ளது அதில் ஒரு உண்மை தான் சித்ரா தூக்க மாத்திரை உட்கொண்டது.
இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒருமுறை தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம்.
அது எதற்காக என்றால் சித்ரா தினமும் சூட்டிங் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது அவரது வருங்கால கணவரான ஹேமந்த் அவரை இன்று யாருடன் டான்ஸ் ஆடின யாருடன் நெருக்கமாக இருந்த என பல கேள்விகளை கேட்டு அவரை மன வருத்தம் அடைய செய்வாராம்.
இதற்கிடையில் இவர்களின் நிச்சயதார்த்தத்தின் போது ஹெமந்தின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் சித்ராவின் குடும்பத்தினர் மட்டுமே அந்த செலவை ஏற்றுக் கொண்டார்களாம்.
அதுமட்டுமல்லாமல் சித்ரா திருவான்மியூரில் ஒரு வீடும் ஒரு காரும் தனது வங்கிக் கடன் மூலம் வாங்கியுள்ளார் அதற்கு தவணை முறை மாதம் மாதம் கட்ட வேண்டிய பணத்திற்காக சிறிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சித்திரா அதை நடித்து கொடுத்து ஏகப்பட்ட பணம் சம்பாதித்து வந்தார் அப்போது கூட ஹேமந்த் அவரது கடனை அடைக்க சித்ராவிடம் இருந்து அவ்வப்போது காசு வாங்கிக் கொள்வாராம்.
சித்ரா சூட்டிங்கில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை அதனால் சித்ராவிடம் நீ இனிமேல் சூட்டிங்கில் நடிக்காத என ஹேமந்த் கூறியிருக்கிறார் அதற்கு சித்ரா நான் வாங்கிய வீடு மற்றும் காருக்கு எல்லாம் லோன் கட்டுவது எப்படி என்று கேள்வி கேட்டு அவரது வாயை அடித்தாராம்.
இதனால் ஒவ்வொரு தினமும் சித்திரா சூட்டிங் முடிந்து வீடு திரும்பும்போது இன்று யாரோடு நெருக்கமாக டான்ஸ் ஆடின யாரோடு நடித்த என சந்தேகக் கண்களுடன் அவரை கேள்வி கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்ய வைத்துள்ளார் ஹேமந்த்.
இந்த உண்மையெல்லாம் போலீசார் விசாரித்தபோது வெளிவந்துள்ளது மேலும் சித்ராவின் மரணத்தைப் பற்றி எத்தனை தகவல்கள் வெளிவருகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.