அங்க 250 கோடி, இங்க 300 கோடின்னு சொன்னயெல்லாம் பொய்யா.? உள்ளூரில் விற்க முடியாமல் காத்து வாங்கும் வாரிசு..!

varisu
varisu

தளபதி விஜய் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வந்தாலும் இதில் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் போன்றவையும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், சங்கீதா, மீனா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம். இது இப்படி இருந்தாலும் ரசிகர்களை இப்பொழுதே கட்டி இழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துள்ளது அந்த வகையில் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து அண்மையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை..

ரிலீஸ் செய்தது அந்த பாடல் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே..

சாட்டிலைட் உரிமம், ஓட்டிட்டு உரிமம் போன்றவைகள் 250 கோடி 300 கோடி வியாபாரம் ஆகிவிட்டது என பல செய்திகள்.. அடுத்தடுத்து வெளியாகின ஓவர்சீஸ் நாடுகளில் மட்டுமே கோடி கணக்கில் லாபம் பார்த்துள்ளது என பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளூரில் இன்னும் வாரிசு திரைப்படத்தை யாருமே வாங்கவில்லை என ஒரு தகவல் வெளி வந்திருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் இந்த உண்மையை கூறி உள்ளார் அதில் அவர் சொன்னது செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரிசு படத்தை இதுவரையிலும் எந்த விநியோகஸ்தர்கள் வாங்கி இருக்கிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு தெரியவில்லை அப்படி பார்த்தால் வாரிசு படத்தை செங்கல்பட்டில் இன்னும் யாருமே வாங்கவில்லை என்பது தான் உண்மை.